Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, January 05, 2017

செல்போனில் இணைய வசதி இல்லாமல் எஸ்எம்எஸ் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு !!


இந்திய ரயில்வே துறை சார்பில் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். நாடு முழுவதும் பணமில்லா
பரிவர்த்தனைக்கு மாறி வரும் நிலையில் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
செல்போனில் இணைய இணைப்பு உள்ளவர்கள் ரயில்வே யின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். மாநகரங்களில் மின்சார ரயில் டிக்கெட்களும் பெற முடிகிறது. ஆனால் இணைய வசதி இல்லாதவர்கள் வெகு நேரம் ரயில் நிலையத்தில் காத் திருந்து, முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. எனவே, செல்போன் மட்டுமே வைத்துள்ள மக்களும் பயன்பெறும் வகையில் குறுஞ் செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற முடியும்.
முன்பதிவு எப்படி?
இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
ஐஆர்சிடிசி-யில் 4 கோடி பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள் ளனர். இதன் மூலம் சராசரியாக தினமும் 6 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதுதவிர, நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின் றனர். ரயில் பயணிகளுக்கு செல் போன் மூலம் பல்வேறு வசதிகள் எளிமையாக கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, செல்போன் மூலம் ‘139’ என்ற எண்ணுக்கு, முன்பதிவுக்கான தகவல்களை எஸ்எம்எஸ் அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள முடியும். இந்த வசதியை பெற முன்னதாக ஐஆர்சிடிசி கணக்கு மற்றும் அதோடு ஒரு வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஓர் அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும். வங்கி கணக்குக்குப் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
மேலும் எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறைகளைப் பூர்த்தி செய்து பயணிகள், தங்கள் செல்போனில் இருந்து '139' என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, டிக்கெட் பதிவு செய்யலாம். இந்த முறையை பயன்படுத்தி, டிக்கெட்டை ரத்து செய்யவும் முடியும். ஒரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த புதிய திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இறுதியில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.