அன்புக்கொண்ட அரசாங்கத்தை உருவாக்கிட
அறிவுக்கொண்டு வாக்களிப்பீர்!
ஆசையில்லா அரசாங்கத்தை உருவாக்கிட
ஆர்வத்தோடு வாக்களிப்பீர்!
இலஞ்சம் இல்லா அரசாங்கத்தை உருவாக்கிட
இலட்சியத்தோடு வாக்களிப்பீர்!
ஈகையுள்ளம் கொண்ட அரசாங்கத்தை உருவாக்கிட
ஈர்ப்புடன் வாக்களிப்பீர்!
உண்மையுள்ள அரசாங்கத்தை உருவாக்கிட
உரிமையோடு வாக்களிப்பீர்!
ஊழல் இல்லா அரசாங்கத்தை உருவாக்கிட
ஊக்கத்தோடு வாக்களிப்பீர்!
எதிரிகள் இல்லா அரசாங்கத்தை உருவாக்கிட
எண்ணம்போல் வாக்களிப்பீர்!
ஏமாற்றதா அரசாங்கத்தை உருவாக்கிட
ஏறு முகத்தோடு வாக்களிப்பீர்!
ஐயம் இல்லா அரசாங்கத்தை உருவாக்கிட
ஐயம் நீங்கி வாக்களிப்பீர்!
ஒற்றுமையை விரும்பும் அரசாங்கத்தை உருவாக்கிட
ஒன்றுப்பட்டு வாக்களிப்பீர்!
ஓட்டை இல்லா அரசாங்கத்தை உருவாக்கிட
ஓட்டுப்போட்டு வாக்களிப்பீர்!
ஒளவைப்போல் வாக்களிப்பீர்! "ஆத்திசூடியாக".....
இஃதே! நம் நாட்டுக்கு தேவை!-என்ற
உறுதியோடு வாக்களிப்பீர்!