Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 25, 2017

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவங்குகிறது - தேர்வுதுறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்