Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 02, 2016

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சியில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூரில் உள்ள டாக்டர்
 எம்ஜிஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்கான கல்வித் தகுதியாக பழைய 11ஆவது வகுப்பு தேர்ச்சி (பழைய எஸ்எஸ்எல்சி) அல்லது புதிய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 பயிற்சியானது அலுவலக வார விடுமுறை நாள்களில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயம், கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களை நவ.14ஆம் தேதி வரை செலுத்தலாம் என்பது, தற்போது டிசம்பர் 17ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிச.17ஆம் தேதியாகும். அன்றே பயிற்சியும் தொடங்குகிறது.
 எனவே இதுவரை பயிற்சி பெறாத அனைத்து கூட்டுறவு சங்கப் பணியாளர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142-222619 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.