உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட் டுள்ள, 'நிர்பயா' ஏவுகணை, நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள இந்த ஏவுகணை, 1,000 கி.மீ., தொலைவுக்கு பாய்ந்து, இலக்கை தாக்கக் கூடிய சக்தி உடையது.
ஒடிசா மாநிலம், சந்திரபுரில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டு, நேற்று, மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டது. இச்சோதனை தோல்வியில் முடிந்தது.