அழுக்கடைந்த, சேதமடைந்த பணத்தாள்கள்
அழுக்கடைந்த, சேதமடைந்த பணத்தாள்கள் என்பவை யாவை?
அழுக்கடைந்த பணத்தாள்கள் என்பன அதிகப்பயன்பாட்டினால் மக்கியும், மடங்கியும் போன பணத்தாள்கள் ஆகும். சேதமடைந்த தாள்கள் என்பன கிழிந்த, வடிவம் மாறியவை, எரிந்தவை, அழுக்கு நீக்க முயன்று சேதப்பட்டவை, செல்லரிக்கப்பட்டவை போன்றன. இரண்டு துண்டாக்கப்பட்ட, இருபகுதிகளிலும் எண்களைக் கொண்ட, ஆனால் இரண்டுமே ஒரே எண்ணாக இருக்கும் நிலையில் உள்ள பணத்தாள் இன்று அழுக்கடைந்த பணத்தாளாகக் கருதப்படுகிறது.
அத்தகைய பணத்தாள்கள் உரிய மதிப்புக்கு மாற்றத்தக்கனவா?
ஆம். அழுக்கடைந்த பணத்தாள்கள் எல்லா வங்கிக் கிளைகளிலும் பெறப்படுதற்கும் மாற்றப்படுவதற்கும் உரியன.
அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த பணத்தாள்களை எவ்வளவு மதிப்புக்கு மாற்றிக்கொள்ள முடியும்?
அழுக்கடைந்த பணத்தாள்களுக்கு உரிய முழு மதிப்புத் தொகையினைப் ஒருவர் பெற முடியும். சேதமடைந்த பணத்தாள்களுக்கு உரிய மாற்று மதிப்பு இந்திய ரிசர்வ் வங்கி விதிகள், 1975 (பணத்தாள் மதிப்பு திரும்பப்பெறல்) இன்படி வழங்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 28 இன் கீழ் இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விதிகளில் கூறியபடி மதிப்பீட்டுக்குப் பின், பொதுமக்கள் இத்தகைய பணத்தாள்களுக்கு உரிய மதிப்பினைப் பெற முடியும். ரூ. 10க்கும் அதற்கு மேலும் இலக்க மதிப்பு கொண்ட கிழிந்த/சேதமடைந்த பணத்தாள்களுக்கு மாற்று மதிப்பு முழு மதிப்பு, அரைமதிப்பு, ஒன்றுமில்லை ஆகிய நிலைகளில் இப்போது விதிகள் உள்ளன. ரூ.1, ரூ.2, ரூ.5 பணத்தாள்களைப் பொருத்தவரை அத்தாள்களின் நிலையின் அடிப்படையில் முழு மதிப்போ அல்லது பணம் பெறாமை என்ற நிலையில் தான் விதிகள் உள்ளன.
பணத்தாள்கள் மதிப்பு திரும்பப்பெறல் விதிகளின் எந்த வகையான பணத்தாள்கள் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு உரியன அல்ல?
பின்வரும் பணத்தாள்கள் திரும்பப்பெறும் விதிகளின்கீழ் மாற்றுத்தொகையைப் பெறுவதற்கு உரியவை அல்ல.
1. முழு பணத்தாளின் பாதிப்பரப்புக் குறைவாக உள்ளவை,
2. வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை, அதாவது வரிசை எண்ணிற்கு முன்னெழுத்தும் மூன்று எண்களும் அல்லது நான்கு எண்களும் இல்லாத ரூ.5ம் அதற்குட்பட்ட இலக்க மதிப்புள்ள நோட்டுகள், ரூ.10ம் அதற்கு மேலும் உள்ள பணத்தாள்களில் இந்தக் குறைபாடு, வரிசை எண்கள் இருக்கும் இரண்டு இடங்களிலும் இருக்குமானால்,
3. ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தினாலாவது அந்தத்தாள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தால் அல்லது முன்னமே தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருந்தால்.
4. கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டால்.
5. வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால், சேதப்படுத்தப் பட்டிருந்தால், திருத்தப்பட்டிருந்தால்,
6. தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அரசியல் பண்புடைய செய்திகளைத் தரக்கூடிய அல்லது தருகின்ற நோக்கமுடைய வார்த்தைகள்/ படங்கள் கொண்டிருந்தால்
ஒரு பணத்தாள் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு உரியது அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்யப்படும்?
பணம் திரும்பப் பெறுவதற்கு உரியதல்லாத தாள்களை, அவற்றைப் பெற்றுக்கொண்ட வங்கிகள் அவற்றை வைத்துக்கொண்டு பின்னர் அழிக்கப்படுவதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கின்றன.
அழுக்கடைந்த/சேதமடைந்த பணத்தாள்கள் எங்கே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன?
எல்லா வங்கிகளுக்கும் தங்கள் கொடுக்கல் வாங்கல் முகப்புகளில் அழுக்கடைந்த தாள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மாற்று மதிப்பினைச் செலுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த/கிழிந்த நோட்டுகளை பணவறைகள் கொண்ட கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்
தற்கால பணத்தாள்களின் தோற்றங்கள்
இப்போது புழக்கத்தில் உள்ள பணத்தாள்களின் பொது அம்சங்கள் எவை?
ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய முன்னர் வெளியிடப்பட்டு இப்போதும் புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள், அசோகா தூண் நீர்க்குறியீட்டையும் அசோகா தூண் உருவப்படத்தையும் கொண்டுள்ளன. முன்னர் வெளியிடப்பட்ட ரூ.500 பணத்தாள்கள் அதாவது 1987முதல், அசோகா தூண் நீர்க் குறியையும் மகாத்மா காந்தி உருவப்படத்தையும் கொண்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது மகாத்மா காந்தி வரிசையில் பணத்தாள்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறது. அவை மகாத்மா காந்தியின் உருவப் படத்தையும் நீர்க்குறியீட்டையும் கொண்டிருக்கும். ஆகஸ்டு 2001 இல் திரும்பவும் வெளியிடப்பட்ட ரூ.5 பணத்தாள்கள் அசோகா தூண் நீர்க் குறியீட்டையும், அசோகா தூண் உருவப்படத்தையும் கொண்டிருந்தது. வங்கியால் வெளியிடப்படும் இந்த தாள்கள் யாவும் மறுக்க இயலாத செலாவணிப் பணங்கள் ஆகும்.
அந்த மாற்றம் ஏன் கொண்டுவரப்பட்டது?
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் பணத்தாள்களின் வடிவத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இதற்குரிய முதன்மையான காரணம் கள்ள நோட்டுகள் உருவாவதைக் கடினமாக்குவதுதான். இந்தியாவும் இதே கொள்கையைப் பின்பற்றுகிறது.
மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்களில் ஏதேனும் சிறப்பு அமசங்கள் உள்ளனவா?
புதிய மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்கள், பழைய தாள்களுடன், ஒப்பிடும்போது பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவை:
- பாதுகாப்பு இழை: ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. இந்த இழை பாதி வெளியில் தெரிவதாகவும் பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும் போது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றமளிக்கும். ரூ.1000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் ‘1000’, ‘RBI’ என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.
- மறைந்திருக்கும் மதிப்பெண்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20,50,100,500,1000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லையேல் இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும்.
- நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்ககுத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருப்பெருக்கக் கண்ணாடியின் வழியே இதனைத் தெளிவாகக் காணமுடியும்.
- அடையாளக்குறியீடு: ரூ.10 தாளைத் தவிர மற்றவற்றில் நீர்க்குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20 இல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50 இல் சதுரம், ரூ.100இல் முக்கோணம், ரூ.500 இல் வட்டம், ரூ.1000 இல் சாய்சதுரம்) இது பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
- செதுக்குருவம்: மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.
- ஒளிரும் தன்மை: தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.
- பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை: ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களில் ரூ.500மற்றும் ரூ.1000 இன் மேல் (லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில்) ஆகியன பார்வைத் தோற்றத்தில் மாறுபடும் அதாவது வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்கள் கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.
கள்ள நோட்டுகள்
நல்ல தாளுக்கும் கள்ள தாளுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவது எப்படி?
மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இல்லாத தாள்கள் கள்ள தாள்கள் என சந்தேகிக்கப்படுகின்றன. இவை துல்லியமாகப் பரிசோதிக்கப் படுகின்றன.
கள்ள நோட்டுகளை அச்சிடுவது, புழக்கத்தில் விடுவது ஆகியன தொடர்பான சட்ட விதிகள் எவை?
கள்ள தாள்களை அச்சிடுவதும், புழக்கத்தில் விடுவதும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 489A இலிருந்து 489 E வரை உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். குற்றத்தின் தன்மைமையைப் பொறுத்து அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.source: rbi website