Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, November 26, 2016

2016 டிசம்பர் 15 வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம்..!

பழைய 1000 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளைத் தவிர எங்கும் மாற்ற முடியாது என்ற சூழல் உள்ள நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா..? இதோ உங்களுக்கான பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் செல்லும் என்பதற்கான பட்டியல். மருத்துவமனை அரசு மருத்துவமனை, அரசு மருந்தகங்கள் போன்ற இடங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் செல்லும் போது பழைய 500 ரூபாய் செல்லும். மருந்தகங்கள் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டு மற்றும் அவர்கள் வழங்கும் ஐடி படிவத்தைக் காண்பித்து பழைய 500 ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம். Ads by ZINC டிக்கெட் கவுண்டர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அரசு மற்றும் மாநில அரசு போக்குவரத்து கழகங்களின் டிக்கெட் கவுண்டர்கள் ஆகிய இடங்களில் பழைய 500 ரூபாய் செல்லும். பால் பூத்துகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பால் பூத்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலும். எரிசக்தி நிலையங்கள் அரசு நிறுவனங்கள் நடத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும். சுடுகாடு அரசு இயக்கி வரும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு 500 ரூபாய் செல்லும். விமான நிலையங்கள் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்கு 500 ரூபாய் நோட்டுகள் செல்லும். சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 5000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். பணத்திற்காக வங்கி, ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டாம்.. ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்..! கார், பைக் வாங்கின காலம் எல்லாம் பேச்சு..! இப்போ ரயிலே வாங்கலாம்..! ‘சந்திரனுக்கு’ தெரிந்தது ‘மோடி’-க்குத் தெரியலையே..! Featured Posts கூட்டுறவு கடைகள் கூட்டுறவு கடைகளில் நுகர்பொருள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும். சமையல் எரிவாயு சமையல் எரிவாயு வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். ரயில் பயணம் ரயில் பயணங்களில் உணவுப் பொருட்கள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் செல்லும். புறநகர் ரயில் சேவை புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்டர்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும். அருங்காட்சியகம் இந்திய தொல்பொருள் கழகம் இயக்கி வரும் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும். அரசு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரி, அபராதம் போன்றவற்றிற்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். பயன்பாடுகள் மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்தும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். ஆனால் இது நடப்பு பில்கள் மற்றும் பழைய பில்களுக்கு மட்டுமே. முன்பணமாக்கச் செலுத்த இயலாது. நீதி மன்றம் நீதி மன்றங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். விதைகள் நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து விதைகள் வாங்கப் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். பள்ளி கட்டணம் மத்திய, மாநில, நகராட்சி மற்றும் உள்ளூர் பள்ளி கட்டணங்கள் செலுத்த 2000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். கல்லூரிகள் மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகள் கட்டணம் போன்றவற்றுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். மொபைல் ரீசர்ஜ் பீரிபெய்டு மொபைல் சிம் கார்டுகளின் டாப் அப் ரீசார்ஜ்கள் ரூ.500 செய்யும் போது செல்லும். கூட்டுறவு ஸ்டோர்கள் நுகர்பொருள் கூட்டுறவு ஸ்டோர்களில் 5,000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய்களை வழங்கி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.