Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, September 07, 2016

டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்

'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரு ஆண்டுகள் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரு ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று, 27 இடங்களிலும் துவங்கியது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளில் சேர முடியாதோர், இந்த படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நாளிலேயே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்கப்பட்டு உள்ளன. 'வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.