Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 22, 2016

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த கோரிய மனு தள்ளுபடி

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்துவதற்கு எதிராகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி, உயர் கல்வி பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ். சுப்ரமணியம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் எஸ்.சுப்ரமணியம் சார்பில் வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, "தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தகுதிப் பட்டியலை வெளியிட்டு, அதன்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் உள்ள சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலித்து வருகின்றன' என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, புதுச்சேரி அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் வெங்கட ரமணி ஆஜராகி, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி என்இஇடி மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "மாணவர் சேர்க்கையின் போது தனியார் கல்லூரிகளால் ஏதேனும் மாணவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடுக்கலாம். இக்கோரிக்கையை மனுதாரர் விடுக்க முகாந்திரம் இல்லை என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று குறிப்பிட்டனர்.


www.tnpgtakarurdt.in