Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 22, 2016

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை நாளை பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தனித் தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுக்காக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலமாகவும், சிறப்பு அனுமதித் திட்டத்திலும் (தத்கல்) விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

www.tnpgtakarurdt.in