Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 22, 2016

தொலைநிலை கல்வி தேர்வில் முறைகேடு புகார்? 400 மாணவர்கள் சேர்க்கை ரத்து

மதுரை: தொலைநிலைக் கல்வி தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்பதால், 400 பேரின் சேர்க்கையை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளதாக காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியை சேர்ந்த நவீன்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பாடத்திட்டத்தின் கீழ் கல்வி மையம் நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். எங்களது மையத்தின் கீழ் பயின்றவர்களில் 400 பேர் கடந்த 17.5.2015ல் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள மையத்தில் தேர்வெழுதினர். ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தலையிட்டு எங்களது மையத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களின் தேர்வுத்தாள்களை திருத்தி, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காமராஜர் பல்கலைக்கழக தேர்வு, ஒழுங்கு மற்றும் மாணவர் நலனுக்கான குழுவின் பரிந்துரைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘‘தர்மபுரி கல்வி மையத்தைச் சேர்ந்த 400 பேர் திருப்பத்தூரில் தேர்வு எழுதவில்லை. தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, தேர்வை ரத்து செய்யலாம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யலாம். இவர்களை பல்கலை.யின் வேறு எந்த பிரிவிலும் எதிர்காலத்தில் சேர்க்கை அனுமதிக்க கூடாது. தர்மபுரி கல்வி மையத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்,’’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனு மீதான விசாரணையை செப். 29க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


www.tnpgtakarurdt.in