Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, September 06, 2016

10–ம் வகுப்பு தேறியவர்களுக்கு இலவச ‘ஸ்மார்ட் போன்’ உத்தரபிரதேச அரசு அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் ‘சமாஜ்வாடி ஸ்மார்ட் போன்’ என்ற இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் நேற்று அறிவித்தார். 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும், ஆன்லைன் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் கொண்ட தனியார் ஊழியர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தாது.

அடுத்த நிதியாண்டில், அக்டோபர் மாதத்துக்கு பிறகுதான் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். எனவே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால்தான் இத்திட்டம் அமலுக்கு வரும்.
இது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், தேர்தல் கமிஷனிடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளன

www.tnpgtakarurdt.in