Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, August 29, 2016

கேட்' தேர்வு செப். 1ல் பதிவு !

ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
முதுநிலை இன்ஜி., படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., படிப்புகளில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை உள்ளிட்ட
நிறுவனங்களில் சேரவும், பெட்ரோலிய நிறுவனங்களில் உயர் அதிகாரி பணியினை பெறவும், கேட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடுத்த கேட் தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, செப்., 1ல் துவங்கி அக்., 4ல் முடிகிறது.பிப்ரவரி, 4, 5, 11 மற்றும், 12ம் தேதிகளில், கேட் தேர்வு நடக்கும். இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி., தேர்வை நடத்துகிறது. தென் மாநில மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., கேட் தேர்வு மண்டல மையமாக செயல்படும்.-