எம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய
வழிமுறைகளை மத்திய மனித வள அமைச்சகம்
உருவாக்கி அறிவிப்பு செய்துள்ளது.
இதில் பெண்களுக்கு பல விதிமுறைகள்
தளர்த்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய
உயர்கல்வித்துறை செயலர் வி.எஸ். ஓபராய்
கூறியதாவது:
எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு புதிய
வழிகாட்டுதல்களை மத்திய மனித வள
அமைச்சகம் உருவாக்குத் தந்துள்ளது.
இதில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தப்
படிப்புகளைப் படிக்கும் பெண்கள் 240 நாள்
பேறுகால விடுமுறையை எடுத்துக்
கொள்ளலாம். பேறுகால விடுமுறை முடிந்ததும்
அவர்கள் தங்களது படிப்புகளைத் தொடரலாம்.

டாக்டரேட் படிப்பு படிக்கும் பெண்களுக்காக
பல்வேறு விதிமுறைகளை அரசு
தளர்த்தியுள்ளது.
மேலும் நிர்வாகம், படிப்பு காலம், தரத்தை
மேம்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.