2015 - 2016 கல்வியாண்டில் கரூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட உன்னதமாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதில் கரூர் மாவட்ட TNPGTA பெருமை கொள்கிறது.
சாதனையாளர்கள் எல்லா இடங்களிலும் உள்ளார்கள் என்பதை நமது செயல்பாட்டின் மூலம் கடந்தாண்டு கரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களால் மீண்டும் நிரூபித்துள்ளோம்.
பல்வேறு கூடுதல் பணிகளுக்கிடையேயும் இத்தகைய சாதனைகளை நமது அரசு பள்ளி ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடியுமென்பதை உறுதியாக சொல்லலாம்.
வரும் கல்வியாண்டிலும் நமது பணி மேலும் சிறக்கும் வண்ணம் பணியாற்றிட உறுதியேற்று செயல்படுவோம்.
"மற்றவர்களால் சாதிக்க முடியுமென்றால்
நம்மாலும் சாதிக்க முடியும்." என்பதை நமது மாணவர்களின் செயல்பாட்டின் மூலம் உலகிற்கு உணர்த்துவோம் நண்பர்களே.!
- TNPGTA கரூர்.