தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய
படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு
ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி
நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தமிழக
அரசின் தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்புத்துறையின் கட்டுப்பாட்டில்
இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனமாகும். இக்கல்வி நிலையம் சார்பில்
எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர்
நிர்வாகத்தில் ஓராண்டு பகுதி நேர முதுகலை
பட்டயப்படிப்பு,. தொழிலாளர் சட்டங்களும்,
நிர்வாகவியல் சட்டங்களும் என்ற ஓராண்டு வார
இறுதி பட்டயப்படிப்பும் நடத்தப்படுகிறது.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான
காலக்கெடு முடிந்த நிலையில், மாணவர்கள்
மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள்
வந்ததால், இப்படிப்புகளுக்கு
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15-ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு
விண்ணப்பக்கட்டணம் ரூ.100. மற்றவர்களுக்கு
ரூ.200 ஆகும். தபாலில் பெற விரும்புவோர்
விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50
சேர்த்து வங்கி வரைவோலை எடுத்து ‘The
Director, Tamilnadu Institute of Labour Studies,
chennai-5’ என்ற முகவரிக்கு அனுப்பி பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்,
வி.ஜி.தியாகராஜன்- 98411 92332 ,
ஆர்.ரமேஷ்குமார்- 9884159410 ஆகியோரை
தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி
நிலையம், எண்.5 காமராஜர் சாலை, சென்னை -5
என்ற முகவரியிலோ, 044-284401102 மற்றும்
28445778 என்ற எண்ணிலோ தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது