ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு
வரையிலான பாடப்புத்தகங்களையும்,
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான
புத்தகங்களையும் தமிழ்நாடு பாடநூல்
நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில், 6-ம் வகுப்பு முதல் +2
வகுப்புகளுக்கான திருத்தப்பட்ட
பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல்
கழகத்தின் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான
புத்தகங்களை www.textbooksonline.tn.nic.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்துக்கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.