்பி.எப் திட்டத்தின் கீழ் பணத்தை திரும்ப பெறும்போது, 60
சதவீத பணத்துக்கு வரி விதிக்கப்படும் என மத்திய நிதி
நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரும்ப பெறும்
பணத்தின் மீதான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்
என அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு முன்பாக திரும்ப
பெறப்படும் அனைத்து பி.எப். முதலீடுகள் மீது
எவ்விதமான வரியும் விதிக்கப்படமாட்டாது. மேலும்,
இதற்கு பிறகு திரும்பப் பெறப்படும் பி.எப்.
முதலீடுகளுக்கும் எவ்விதமாக வரியும்
விதிக்கப்படமாட்டாது.
ஈ.பி.எப். திட்டத்தில், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்
தேதிக்குப் பின் முதலீடு செய்யப்படும் பணம், திரும்பப்
பெறும்போது, அப்பணத்துக்கான வட்டிக்கு மட்டுமே வரி
விதிக்கப்படும் என நிதித்துறை செயலர் கேஷ்முக் ஆதியா
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
திட்டத்தின் கீழ் 3.7 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதேபோல பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்)
முதலீடு திட்டத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை.
இத்திட்டத்தில் பணம் முதலீட்டுக்கும், திரும்ப
பெறுவதற்கும், முதலீடு மீதான வட்டிக்கும் வரி ஏதும்
இல்லை.