மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12-வது வகுப்பு
மற்றும் 10-வது வகுப்பு தேர்வுகள் நேற்று
தொடங்கின. தேர்வுகள் தொடங்கினஇந்தியா முழுவதும்
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஏராளமாக உள்ளன. சி.பி.எஸ்.இ.
12-வது வகுப்பு தேர்வு நேற்று ஆங்கில பரீட்சையுடன்
தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 22-ந்தேதி வரை
நடக்கிறது. இந்தியா முழுவதும் 12-வது வகுப்பு தேர்வை
10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ-மாணவிகள்
எழுதினார்கள்.10-வது வகுப்பு தேர்வு நேற்று சில
பள்ளிகளில் தொடங்கியது. டைனமிக் ரீடெய்ல் உள்ளிட்ட
சில விருப்ப பாடம் உள்ள பள்ளிகளில் மட்டும் நேற்று
தேர்வு நடைபெற்றது. பெரும்பாலான பள்ளிகளில் 10-வது
வகுப்பு தேர்வு இன்று (புதன்கிழமை) தான் அறிவியல்
பாடத்துடன் தொடங்குகிறது. இந்த 10-வது வகுப்பு
தேர்வு வருகிற 28-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை
14 லட்சத்து 99 ஆயிரத்து 122 பேர் எழுதினார்கள்.சென்னை
மண்டலம்தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மராட்டியம்,
கர்நாடகம், அந்தமான் - நிக்கோபார், கோவா உள்ளிட்ட
மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 12-வது
வகுப்பு தேர்வை 56 ஆயிரத்து 948 பேர் எழுதினார்கள். 10-
வது வகுப்பு தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரத்து 309 பேர்
எழுதினார்கள்.இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. 12-வது
வகுப்பு தேர்வு எழுதுபவர்களும் 10-வது வகுப்பு
தேர்வுகளும் எண்ணிக்கை மிக குறைவு. அதாவது அந்த
எண்ணிக்கை, தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின்
எண்ணிக்கைக்கு சமமாகும். மாநில வாரிய தேர்வுகளில்
கூடிய மட்டும் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்வு
எழுதுவார்கள். ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அப்படி
அல்ல. வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள்
அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதவில்லை.
உதாரணமாக அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளில் உள்ள
மாணவர்கள் வேறு பள்ளிகளில் தேர்வு
எழுதினார்கள். கடவுள் வழிபாடுநேற்று முதல் தேர்வு
என்பதால் பெரும்பாலான மாணவர்கள் அவர்களின்
கடவுளை வணங்கிவிட்டும், பெற்றோர்களிடமும்,
ஆசிரியர்களிடமும் ஆசி பெற்றுவிட்டும் தேர்வு
எழுதினார்கள்.10-வது வகுப்பு தேர்வு எழுதிய சில
மாணவர்கள் கூறுகையில், ‘2 கேள்விகள்
பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டன.
ஆனால் அவை கீழ் வகுப்பில் படித்தவைதான்’ என்றனர்.