Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 02, 2016

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி

மும்பை : ரிசர்வ் வங்கி, வட்டி வகிதங்களை குறைக்கும்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை. இதனால் வங்கிகள் மற்றும் தொழில்
துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர்
ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு...
* ரெப்போ வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை, ஏற்கனவே இருக்கும் 6.75 சதவீதமே
தொடரும்.
* இதேப்போன்று சிஆர்ஆர்., எனப்படும் ரொக்க
கையிருப்பு விகிதமும் 4 சதவீதத்திலேயே தொடரும்.
* 2017ம் ஆண்டுக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள்
இருக்கும்.
* நடப்பு நிதியாண்டு 2016-ல் நாட்டின் பொருளாதார
வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும், 2017-ல் 7.6
சதவீதமாக உயரும்.
* நடப்பு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள் பொறுத்து வரும்காலத்தில் வட்டி
வகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம்.
* கோதுமை உற்பத்தி மெதுவாக மெதுவாக
முன்னேற்றம் அடையும்.