Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 16, 2016

அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தால் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி பாதிப்பு; ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் நடக்கும் அரசு ஊழியர், ஆசிரியர்கள்
போராட்டத்தால் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும்
பணி பாதிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி
ராஜேஷ் லக்கானி கூறினார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு ராஜேஷ் லக்கானி அளித்த
பேட்டி வருமாறு:-
பணிகள் பாதிப்பு
தமிழக சட்டசபை தேர்தலுக்குத் தேவையான 75 ஆயிரம்
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துவிட்டன.
என்றாலும், கூடுதலாக 30 ஆயிரம் எந்திரங்களை
கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து
வருகிறோம்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி
தொடங்கியுள்ளது. ஆனால் தற்போது நடந்து வரும் அரசு
ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தால் இந்தப் பணியில்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3 வழியில்...
போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறி தி.மு.க. தரப்பில்
தரப்பட்ட வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட
தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை 3
வழிகளில் செய்ய இருக்கிறோம். முதலாவது, இறந்துபோன
வாக்காளர் பட்டியலை தனியாக தயாரிக்கிறோம்.
அடுத்ததாக, எங்களிடம் இருக்கும் தொழில்நுட்பம் மூலம்,
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்
இருக்கும் பெயர்ப் பதிவுகளை சரிபார்க்கிறோம். பெயர்,
தந்தை பெயர், வயது, புகைப்படம் ஆகியவற்றை வைத்து
சரிபார்க்கும் பணி நடத்தப்படுகிறது. மூன்றாவதாக,
அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள ஆட்சேபனைகளை
வைத்து சரிபார்க்கிறோம். தி.மு.க. தரப்பில் 51
தொகுதிகளுக்கான பட்டியல் தரப்பட்டுள்ளது.
கிராம சபைகளில் பட்டியல்
இந்த சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்ததும் அவை
வாக்குச்சாவடி அளவிலான அதிகாரியிடம் தரப்படும்,
அவர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்புப் பணியில்
ஈடுபடுவார்கள்.
இந்தப் பணிகள் முடிந்ததும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட
கட்சிகளுக்கும் நீக்கப்படும் பெயர்ப் பட்டியல் தரப்படும்.
அதில் ஆட்சேபனைகள் இருந்தாலும் அவர்கள்
தெரிவிக்கலாம். 26-ந் தேதி கிராமசபைகளில் வாக்காளர்
பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். நீக்கப்பட்ட பெயர்களின்
அருகில் ‘நீக்கப்பட்டது’ என்று குறிக்கப்பட்டு இருக்கும்.
தேர்தல் தேதி
சுருக்க திருத்த முறைப்படி சேர்க்கப்பட்ட 17 லட்சம்
வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை
தரப்பட்டுவிட்டது. தற்போது சிறப்பு முகாம்களில் பெயர்
சேர்ப்பதற்காக அளிக்கப்பட்ட சுமார் 7 லட்சம்
விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு பெயர் சேர்க்கப்படும்.
தமிழகத்தில் நடக்க இருக்கும் தேர்வுகளின் தேதிகளை
இந்திய தேர்தல் கமிஷன் கேட்டிருந்தது. அதை
கொடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தேர்தல்
தேதியை இந்திய தேர்தல் கமிஷன் முறைப்படி
அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.