Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, February 01, 2016

கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அலைக்கலைப்பு; பெண் ஆசிரியர்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி அவதி

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது,அரசு பள்ளிகளை மூடி வருவது,
ஆசிரியர்களுக்குப் பணிபாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 15அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு(ஜாக்டோ) கடந்த இரண்டு நாட்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இறுதி நாளான இன்று கரூர் வட்டாசியர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேருந்நது நிலையம் நோக்கி மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,சிறிது நேரம் ஸ்தம்பித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அருகிலிருந்த திருமண மண்டபத்தில் கைது தங்கவைக்கப்பட்டனர்.அங்கு அடிப்படை வசதிகளான  குடிநீர்,கழிப்பிட வசதியின்றி அவதிப்பட்டனர்.

இதனால் கோபமுற்ற ஆசிரியர்கள் மண்டபத்தில் காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் வேறு மண்டத்தில் கைது செய்யப்பட்ட ஆண் ஆசிரியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மதிய உணவு கிடைக்குமா?என்ற  சந்தேகம் எழுந்துள்ளது..