Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 31, 2016

வீறுகொண்டெழு தோழா..!!

தான் பயந்தவன், பிறரையும் பயப்பட செய்கிறான் என்பார் மகாவீரர்.

நடவடிக்கை பாயும் பள்ளிக்கு வாருங்கள் என்பார் தலைமைஆசிரியர்.
நீங்கள் தைரியமாய் இருங்கள் என ஆறுதல் சொல்லுங்கள்.

நான் போயிட்டேன் நீ வரலியா என்று கேட்டால்
நான் போரடப்போகிறேன்  நீ வரவில்லையா? என கேளுங்கள்.

சிறையே சென்றுவிட்டோம்
இனி என்ன இருக்கு?
அதுக்கு மேல.

பள்ளிக்கு எந்த ஆண் ஆசிரியர் நாளை போனாலும்
கடந்த 2 நாட்கள் பெண்கள்தான் அதிகம் கைது ஆகிருக்காங்க.
தைரியத்தின் அடையாளமாய் சேலை மாறிவிட்டது
நீங்களும் அணிந்தால் தைரியம் வரும் என்று சொல்லுங்கள்.

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்.
தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே
உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி! என்றார் பெர்னாட்ஷா.
மாற்றம் உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது

நாம் கேவலமாக சொல்லும் காகங்கள் கூட
தன் இனம் பாதிக்கப்பட்டால் இணைகின்றன.
நாம் எப்போது உணர்வது?

போராடுவோம் வெற்றிகிட்டும் வரை !!
வெற்றிபெறுவோம்  போராடும் வரை !!!

நாளை 1.2.16  நம் நாள்
போராட்டத்தின் முடிவுநாள்