Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 10, 2016

கனமழையால் பாதித்தோருக்கு கரூர் மாவட்ட TNPGTA சார்பில் உதவி

 
சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் கரூர் மாவட்ட TNPGTA சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஆசிரியர்கள் ரூபாய் 30,000 அளவிற்கு நிதியுதவி வழங்கினார்கள்.

இந்த நிதியுதவி மூலம் சென்னை பரங்கிமலையிலுள்ள புனித ஹெலன் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பயிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 1,000 ரூபாய் மதிப்பிற்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் 8.1.2016ஆம் தேதி கரூர் மாவட்ட TNPGTA மாநில துணைத்தலைவர் நல்லாசிரியர் திரு. அந்தோணிசாமி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆசிரிய நண்பர்கள் வழங்கிய நிதியுதவி  மூலமாக 65 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் கரூர் மாவட்ட TNPGTA சார்பாக இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.