Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 17, 2016

‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்னும் மத்திய அரசின் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்

்ஸ்டார்ட் அப் இந்தியா’ என்னும் மத்திய
அரசின் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
அவர் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு சலுகை
அறிவிப்புகளையும் வெளியிட்டார்.‘ஸ்டார்ட் அப்’ இந்தியா
உலகளவில் இன்று பிரபலமாக உள்ள பன்னாட்டு
வலைத்தள, இணையதள நிறுவனங்கள் பலவும் ‘ஸ்டார்ட்
அப்’ நிறுவனங்களாக தொடங்கப்பட்டவைதான். புதிய
கருத்துருவை உருவாக்கி, அதை திட்டமாக தீட்டி, தொழில்
தொடங்குபவை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள். இவற்றை
தொடங்குவது, வணிக ரீதியில் வெற்றிபெறச் செய்வது
சவாலானது.நமது நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில்
முன்னணியில் உள்ள நிறுவனங்களும், ‘ஸ்டார்ட் அப்’
நிறுவனங்கள்தான். இத்தகைய நிறுவனங்களை தகவல்
தொழில் நுட்பம், ஆன்லைன் வர்த்தகம் போன்ற
துறைகளில் மட்டுமல்லாமல் சுகாதாரம், சுற்றுலா,
விவசாயம், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல துறைகளில்
தொடங்குவதற்கு, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர
மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு
‘ஸ்டார்ட்–அப் இந்தியா, ஸ்டாண்ட் அப்
இந்தியா’ (‘தொடுங்கிடு இந்தியா, எழுந்து நின்றிடு
இந்தியா’) என்ற புதிய கோஷத்தையும், திட்டத்தையும்
கையில் எடுத்திருக்கிறது.தொடங்கினார், மோடி
நமது நாட்டில் புதிய யோசனைகளுடன் தொடங்கப்படும்
‘ஸ்டார்ட் அப்’ தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு
தொழில் முனைவோருக்கு உதவும் வகையில்,
அவர்களுக்கான நடைமுறைகளை நட்புமுறையில்
அமைத்தல், முதலீடுகள் எளிதாக கிடைக்க உறுதி செய்தல்
போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்த திட்டத்தை மத்திய
அரசு வடிவமைத்துள்ளது.இந்த புதிய திட்டத்தை பிரதமர்
நரேந்திர மோடி, டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடந்த
நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். ‘ஸ்டார்ட் அப்’
நிறுவனங்களின் செயல் திட்டத்தையும் வெளியிட்டு அவர்
பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:–‘இப்போது
புரிந்து விட்டது’
இன்று (நேற்று) சனிக்கிழமை. அரசு, வழக்கமாக
விடுமுறை மனநிலையில் இருக்கும். நான்(ஓயோ ரூம்ஸ்
நிறுவனத்தை சேர்ந்த) ரிதேஷ் பேசியதை கவனித்தபோது,
ஒரு டீ வியாபாரி ஏன் ஓட்டல்கள் தொடங்கக்கூடாது என
நினைத்தேன். நரேந்திர மோடியால் முடியும் அல்லது
முடியாது என்பது விஷயம் அல்ல. நமது நாட்டின்
இளைஞர்களால் அதை செய்ய முடியும்.நான் ஆகஸ்டு 15–
ந்தேதி ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப்
இந்தியா’ (தொடங்கிடு இந்தியா, எழுந்திடு இந்தியா)
திட்டத்தை குறிப்பிட்டபோது, அது பதிவாகவில்லை.
ஆனால் இப்போது ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்றால் என்ன
என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.யோசனைகள்
ஈர்க்கின்றன
அரசாங்கம் செய்தால் அது நடக்கும் என நிறைய பேர்
நினைக்கிறார்கள். நான் மாற்றி யோசிக்கிறேன்.
அரசாங்கத்தால் செய்ய முடியாது என்றால், நிறைய
நடக்கும். எனவே நாங்கள் என்ன செய்யக்கூடாது என
நீங்கள் சொல்வதை கவனிக்க இங்கே இருக்கிறோம்.
ஏனென்றால் 70 வருடங்களாக நாம் செய்து விட்டோம். நாம்
எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள்.நிறைய பேரிடம்
யோசனைகள் இருக்கின்றன. அவர்கள் காலையில்
சிந்திக்கிறார்கள். மாலையில் கீழே போட்டு விடுகிறார்கள்.
ஆனால் சிலர்தான் அந்த யோசனைகளுக்குள்
கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். அங்கே ஒரு ஆற்றல்
இருக்கிறது. உங்களுக்குள்ளும் அர்ப்பணிக்கப்பட்ட
கனவுகள் இருக்கின்றன.சாகசங்கள், நெருக்கடிகள்
விண்வெளி திட்டங்களை செயல்படுத்த தொடங்கியபோது,
நம்பிக்கையின்மைதான் உலகமெங்கும் நிலவியது. எனவே
ஒன்றை நீங்கள் தொடங்குகிறபோது, அதன் எதிர்காலத்தை
நீங்கள்மட்டுமே பார்க்க முடியும். மற்றவர்கள் உங்களை
பைத்தியம் என நினைப்பார்கள். தொழில் முனையும்
ஆர்வத்தில் மட்டும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்
தொடங்கப்படுவதில்லை. சாகசங்களை, நெருக்கடிகளை
எதிர்கொள்ளும் ஆர்வத்திலும்
தொடங்கப்படுகின்றன.யார்வெற்றி பெற முடியும்?
பணம் மட்டுமே பண்ண வேண்டும் என்று
விரும்புகிறவர்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில்
ஒருபோதும் வெற்றிபெற முடியாது. யார் ஏதேனும்
மாற்றங்களை செய்ய விரும்புகிறார்களோ,
அவர்களால்தான் வெற்றி பெற முடியும்.அனைத்து
பிரச்சினைகளுக்கும் தீர்வு இப்போது ஒரு செயலி (ஆப்)
வடிவில் வந்து விட்டது. நான் இதன்மூலம் பெரிதும் பலன்
அடைந்துள்ளேன். நான் நரேந்திரமோடி என்ற செயலியை
கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கதைகளை நரேந்திர
மோடி மொபைல் ஆப்பில் பகிர்ந்து கொள்ளலாம்.நம்பிக்கை
யுகம்
மனச்சோர்வான காலமெல்லாம் கடந்து சென்று விட்டது.
நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது நம்பிக்கை
யுகம்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி
பேசினார்.‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர்
மோடி அறிவித்த செயல் திட்டங்களில் முதல் 3
ஆண்டுகளுக்கு சோதனை கிடையாது, சுற்றுச்சூழல்
சுயசான்று, ஸ்டார்ட் அப் இந்தியா மையம், ஒற்றைமுனை
தொடர்பு, ஒரே நாளில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க
ஒரு மொபைல் ஆப் உள்ளிட்டவை அடங்கும்.ஸ்டார்ட் அப்
நிறுவனங்களை தொடங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி
நிதியுடன் கூடிய நிதி அமைப்பையும் பிரதமர் மோடி
அறிவித்தார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 3
ஆண்டுகளுக்கு வரி விலக்கு என பல சலுகைகளையும்
மோடி அறிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னணி
நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.