Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 17, 2016

திருவள்ளுவர் தினத்தையொட்டி 9 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்; தமிழக அரசு வழங்கியது

திருவள்ளுவர் தினத்தையொட்டி 9 தமிழ் அறிஞர்களுக்கு
தமிழக அரசு விருது வழங்கியது.
விருது வழங்கும் விழா
திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக அரசின்
தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கும்
நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா
அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை
தாங்கினார். அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி,
கோகுல இந்திரா, பழனியப்பன், பா.வளர்மதி ஆகியோர்
சிறப்புரை ஆற்றினர்.
நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் 9 தமிழ் அறிஞர்களுக்கு விருது மற்றும்
ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
திருவள்ளுவர் விருது-தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,
தந்தை பெரியார் விருது-வி.ஆர்.வேங்கன், திரு.வி.க.
விருது-தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், பாரதியார்
விருது-கவிஞர் பொன்னடியான், பாவேந்தர் பாரதிதாசன்
விருது-வீ.ரேணுகாதேவி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-
ரா.கோ.ராஜாராம், பேரறிஞர் அண்ணா விருது- பர்வத
ரெஜினா பாப்பா, பெருந்தலைவர் காமராஜர் விருது-
வேங்கடசாமி, அம்பேத்கர் விருது-பொன்னுசாமி
ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதக்கம் அணிவித்து
சான்றிதழ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு
மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான சான்றிதழை
வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:-
ஓய்வறியாது...
வாக்களித்த மக்களின் நம்பிக்கையினை ஈடேற்றி,
நிர்வாகத்தை சீர்படுத்தி, நேர்படுத்தி, திறம்பட
மேம்படுத்தி, உரிமைக்குரல் எழுப்பி, உற்சாகப் பணியாற்றி,
ஆக்கப்பூர்வ சிந்தனையால், அறிவார்ந்த செயல்களால்,
முன்னோடித் திட்டங்களால், தமிழையும்,
தமிழ்நாட்டையும் கட்டிக்காத்து மேம்படுத்தி, தமிழர்
வாழ்வு நலம் பெறவே, ஜெயலலிதா ஓய்வறியாது
உழைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக தமிழ்
சமுதாயத்திற்கு ஆற்றிய அரும் பணியின் காரணமாக
தமிழ்நாடு அரசின் விருதுகளை பெறுகின்ற
அனைவருக்கும் ஜெயலலிதா சார்பாக வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மகிழ்ச்சி
அனைவரையும் வரவேற்று தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை செயலாளர் மூ.ராஜாராம் பேசியதாவது:-
திருக்குறள் பல்வேறு பெருமைகளை உள்ளடக்கியது.
இன்றைக்கு அதிகமான மொழிகளில் திருக்குறள் மொழி
பெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழுக்கு அடையாளம்
திருக்குறள். தமிழ்நாட்டுக்கு அடையாளம் முதல்-
அமைச்சர் ஜெயலலிதா. அவர் தமிழுக்கும், தமிழ்
வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறார். அதிகமான நிதிகளை
ஒதுக்கி தமிழை உலக அரங்கில் பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருது பெற்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்
பேசும்போது, ‘திரு.வி.க. விருது பெற்றது எனக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.வி.க. பெயரில்
பெற்றது ஒன்று, மற்றொன்று எனது குரு சாவிக்கு அவர்
குரு. அந்த வகையில் அவர் குரு முதல்வர். இந்த விருது
என்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கும்,
எழுத்தர்களுக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.
அவர்களின் முகமாகவே இந்த விருதை பெற்றுள்ளேன்’
என்றார்.
தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் பேசும்போது, ‘எனக்கு
விருது அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தமிழ் பணி
தொடர வேண்டும். தமிழறிஞர்களுக்கு தொடர்ந்து
விருதுகள் வழங்க வேண்டும்’ என்றார்.
பாடல்கள்
நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களுடன் அமைச்சர்கள்
புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக, பள்ளி
மாணவிகள் சேர்ந்திசை, திருக்குறள் இசை, தமிழிசை
பாடல்களை பாடினர்.