Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, January 14, 2016

இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருதுகள் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்காணும் பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு :
1. திருவள்ளுவர் விருது - 2016 : முனைவர் வி.ஜி.சந்தோசம்
2. தந்தை பெரியார் விருது – 2015 : வி.ஆர்.வேங்கன் தருமபுரி
3. அண்ணல் அம்பேத்கர் விருது-2015 :எ.பொன்னுசாமி
4. பேரறிஞர் அண்ணா விருது – 2015 : பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா காரைக்குடி
5. பெருந்தலைவர் காமராசர் விருது – 2015 : மருத்துவர் இரா. வேங்கடசாமி காந்தி நிகேதன் தே.கல்லுப்பட்டி
6. மகாகவி பாரதியார் விருது – 2015 : கவிஞர் பொன்னடியான்
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2015 : முனைவர் வீ.ரேணுகாதேவி, மதுரை
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2015 : கி.வைத்தியநாதன் ஆசிரியர், தினமணி
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - 2015 : இரா.கோ. இராசாராம் மதுரை
மேற்காணும் விருதுகளை 16.1.2016 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
விருது பெறுவோருக்கு தலா ரூ.1.லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.
மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpgtakarurdt.blogspot.in