Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, January 29, 2016

சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது என்றும் அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கல்வி கட்டணம் தமிழ்நாட்டில் கடந்த 2010–ம் ஆண்டு மே மாதம் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. தனியார் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்கு முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. இதை எதிர்த்து 6 ஆயிரத்து 400 பள்ளிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா செய்தார். இதையடுத்து குழுவின் தலைவராக பதவியேற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் விசாரணை நடத்தினார்.
2011–ம் ஆண்டில் அந்த பள்ளிகளுக்கான கட்டணங்களை அவர் நிர்ணயித்து வெளியிட்டார். பின்னர் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகள் தாங்களே கட்டண நிர்ணயக் குழு முன்பு ஆஜராகி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ரவிராஜபாண்டியன் குழு நோட்டீசு அனுப்பியது.

ஐகோர்ட்டு தீர்ப்பு இதை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து தமது பதவியை ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஐகோர்ட்டு அனுமதியுடன் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் குழு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அறிவித்தது.
இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த ஐகோர்ட்டு 2012–ம் ஆண்டு செப்டம்பர் 21–ந் தேதி தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது.
இடைக்கால உத்தரவு இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதன் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் ராகேஷ் திவிவேதி, யோகேஷ் கன்னா ஆகியோர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த இடைக்கால உத்தரவு விவரம் வருமாறு:–
தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது தனியார் பள்ளிகளுக்கு என்று தனியான சட்ட விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளுக்கு என்று இரண்டுக்கும் தனித்தனியாக விதிமுறைகள் உள்ளன. எனவே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் தங்களுக்கான கட்டணங்களை அவர்களே தீர்மானிக்கலாம். இதனை தமிழக அரசின் கட்டண குழு தீர்மானிக்க முடியாது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவானது இந்த பள்ளிகளில் விதிக்கப்படும் கட்டணங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் பொருந்தவில்லை என்றால் அதனை சீர்நோக்கி ஆராய்ந்து, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.
www.tnpgtakarurdt.blogspot.in