Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, January 29, 2016

உங்கள் வரிப் பணத்தைக் குறைக்க எளிமையான ஏழு வழிகள்..!


www.tnpgtakarurdt.blogspot.in
வரிச் சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை
முழுமையாக அறிந்துகொண்டாலே நாம் அதிகளவிலான
வரிப் பணத்தைச் சேமிக்க முடியும். 10இல் 8 பேர் வருமான
வரியைக் குறைக்கத் தெரியாமல், வரி செலுத்த வேண்டிய
திட்டத்தில் முதலீடு செய்து, மறைமுகமாக வரியைச்
செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உங்களது வரி
வரிச்சுமையைக் குறைத்துக்கொள்ளப் பல உத்திகள்
உண்டு என்பதை உணர்த்தவே இக்கட்டுரை. இதோ
உங்களுக்காகச் சில சூப்பர் டிப்ஸ்..
1. பணவீக்க விகிதப் பட்டியலை பயன்படுத்திக்
கொள்ளுங்கள் பணவீக்க உயர்வு கடந்த சில
வருடங்களாக முதலீட்டாளர்களுக்குப் பெரிய
தலைவலியாக உள்ளது. ஆனால் சிலருக்கு இது
பயனளிக்கவும் செய்கிறது. வரிச் சட்டங்கள்
முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை
பணவீக்கத்தைப் பொருத்து மறுமதிப்பீட்டைச் செய்ய
அனுமதிக்கின்றன.
துணைவர் பணிபுரியவில்லை என்றால் அவர் பெயரில்
முதலீடு செய்யுங்கள் உங்கள் மனைவிக்குப் பணத்தைப்
பரிசாக அளித்து அது முதலீடு செய்யப்பட்டால் வரி
அதிகாரிகள் அதில் கிடைக்கும் வருமானத்தை உங்கள்
வருமானத்தில் சேர்த்து விடுவார்கள். ஆனால் அதைப்
பிபிஎ போன்றவற்றிலோ அல்லது வரியற்ற கடன்
பத்திரங்களிலோ முதலீடு செய்தால் அதற்கு வரிப்
பிரச்சினை இருக்காது
சிறு வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள் உங்கள்
குழந்தையின் பெயரில் முதலீடு செய்திருந்தால் அந்த
வருமானமும் உங்கள் கணக்கில் வரும். ஆனால் ஒரு
வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு 1500 ரூபாய் வரை இதில்
வரிவிலக்கு உண்டு. இந்தச் சலுகை அதிகபட்சம் இரண்டு
குழந்தைகளுக்குப் பொருந்தும்.
www.tnpgtakarurdt.blogspot.in
மறந்துவிட்ட யூலிப் முதலீட்டு மறந்துவிட்ட யூலிப்
முதலீட்டு நம்மில் பலர் நிதித் திட்டத்தில் கருத்தில்
எடுத்துக்கொண்ட யூலிப் திட்டங்களுக்கு ப்ரிமியம்
தொகையைச் செலுத்துவதை நிறுத்தியிருப்போம். இந்தக்
கூட்டத்தில் நீங்களும் ஒருவரானால் வரியற்ற
வருமானத்திற்கு யூலிப் முதலீடுகளை முயன்று
பார்க்கலாம். நீங்கள் நிலுவையில் வைத்திருக்கும் பாலிசி
ப்ரிமியம் தொகைகளை ஒரே தவணையில் செலுத்தி
வரியைத் தவிர்த்து வருமானத்தைப் பெற்றிடுங்கள்.
ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தை உருவாக்குங்கள் ஒரு
கூட்டுக் குடும்பத்தை உருவாக்குவதன் மூலம்
அடிப்படை வரிச் சலுகையை இருமடங்காகப்
பெறமுடியும். வருமான வரித் துறை கூட்டுக்
குடும்பத்தை ஒரு தனி அமைப்பாகக் கருதுகிறது. மற்ற
அனைத்து வரிச்சலுகைகளும் இதற்கும் பொருந்தும்.
1.
www.tnpgtakarurdt.blogspot.in