Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, January 25, 2016

பெண்கள் பெயரில் சொத்து கணக்கெடுப்பில் புது தகவல்

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்' என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், நம் நாட்டில், 40 சதவீத பெண்களுக்கு, சொத்தோ அல்லது சொத்தில் பங்கோ உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள முக்கியமான, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தேசிய குடும்ப நலத்துறை சார்பில், பெண்களின் நிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; அதில் வெளியான முடிவுகள், பெண் உரிமை ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளன. கணக்கெடுப்பு முடிவுகள்: நம் நாட்டில், 40 சதவீத பெண்களின் பெயர்களில், சொத்தோ அல்லது சொத்தில் பங்கோ உள்ளது. கல்வியறிவு குறைவாக இருப்பதாக கருதப்படும், பீஹார் மாநிலத்தில், 58 சதவீத பெண்களின் பெயரில் சொத்து உள்ளது, ஆச்சரியம் அளிக்கும் தகவல்.



இதற்கு அடுத்தபடியாக, வட கிழக்கு மாநிலங்களான, மேகாலயா, திரிபுரா ஆகியவற்றில், 57 சதவீதம் பெண்களுக்கும், கர்நாடகாவில், 51 சதவீத பெண்களுக்கும், தெலுங்கானாவில் 50 சதவீதம் பெண்களுக்கும், அவர்களின் பெயர்களில் சொத்துகள் உள்ளன.
குடும்பத்தில், ஏதாவது ஒரு முடிவு எடுக்கும்போது, 75 சதவீத பெண்கள், அந்த முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாடு முழுவதும், சத்துணவு, கர்ப்பிணிகள், குழந்தைகள் நலமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
www.tnpgtakarurdt.blogspot.in