தன்னுயிரை துட்சம் என நினைத்து பிறரை காப்பாற்றிய 4 மராட்டிய
சிறுவர்களுக்கு வீர தீர செயல் புரிந்ததற்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
தேசிய விருது மத்திய அரசால் ஆண்டு தோறும் வீர, தீர செயல்கள் புரிந்து பிறரின் உயிரை காப்பாற்றும் சிறுவர்களுக்கு வீர தீர செயல்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2014–ம் ஆண்டு வீர தீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வருகிற 24–ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் விருதிற்கு தேர்வானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்குகிறார். இந்த விருதிற்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:–
3 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன் நாக்பூரை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவன் கவுரவ். இவன் கடந்த 2014–ம் ஆண்டு நாக்பூரில் உள்ள அம்பாசாரி ஏரி பகுதியில் சென்று கொண்டு இருந்தான். அப்போது இவனது நண்பர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த கவுரவ் துணிச்சலுடன் நீரில் குதித்து அவர்களில் 3 பேரை சாமர்த்தியமாக காப்பாற்றி கரை சேர்த்தான். தனது 4–வது நண்பனை காப்பாற்ற முயன்றபோது துரதிருஷ்டவசமாக கவுரவ் நீரில் மூழ்கி பலியானான்.
தன் உயிரை கொடுத்து 3 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன் கவுரவுக்கு வீர தீரச்செயல்களுக்கான உயரிய விருதான பாரத் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை கவுரவின் தாயார் ரேகா பிரதமரிடம் இருந்து பெற உள்ளார்.
பெற்றோரை இழந்த சிறுவனின் துணிச்சல் மும்பை அருகே உள்ள வால்கேஷ்வர் பகுதியை சேர்ந்தவன் மோகித். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்துவிட்டான். எனவே தன் மாமா வீட்டில் வசித்து வந்தான். இவன் கடந்த 2014–ம் ஆண்டு வீட்டருகே உள்ள பான்கங்கா குளம் அருகே சென்று கொண்டு இருந்தான். அப்போது கோடை விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பாஸ்தே(வயது9) என்ற சிறுமி குளத்தில் உள்ள சகதியில் சிக்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தாள்.
சிறுமி தண்ணீரில் சிக்கியதை ஊரே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தபோது 25 அடி ஆழ குளத்தில் சிறுவன் மோகித் தைரியமாக குதித்தான். அவன் சிறுமியை மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தான். சிறுவனின் வீர தீர செயலை பாராட்டி அவனுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
5–ம் வகுப்பு சிறுவன் ஜல்காவ் பகுதியை சேர்ந்த 5–ம் வகுப்பு சிறுவன் நிலேஷ். இவன் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் 30–ந் தேதி முக்தாய் கோவில் பகுதியில் சென்று கொண்டு இருந்தான். அப்போது கை, கால் கழுவச்சென்ற 11 வயது சிறுவன் பகவத் தண்ணீரின் ஆழமான பகுதியில் தவறி விழுந்தான்.
தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுவனை நிலேஷ் சிறிதும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து காப்பாற்றினான்.
உயிரை துட்சம் என நினைத்து... வார்தா பகுதியை சேர்ந்தவன் வைபவ். இவன் கடந்த 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 26–ந் தேதி தன் நண்பர்களுடன் நந்தி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தான். அப்போது திடீரென நீர் மட்டம் அதிகரித்தது. மேலும் நீரோட்டம் வேகமாக இருந்ததால் வைபவின் நண்பன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். அதிர்ஷ்டவசமாக வைபவ் நண்பன் அந்த பகுதியில் இருந்த ஒரு பாலத்தின் தூணை பிடித்து கொண்டு நின்றான். மேலும் தன்னை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினான்.
அங்கு நின்ற பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நின்றபோது சிறுவன் வைபவ் தன் உயிரை துட்சம் என நினைத்து நீரில் குதித்தான். பின்னர் வைபவ் தண்ணீர் போராடி நீந்தி தன் நண்பனை மீட்டு வெளியே கொண்டு வந்தான்.
www.tnpgtakarurdt.blogspot.in