ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஏற்கனவே 4 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ என்ற 5-வது செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் இன்று காலை 9.31 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 48 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 18-ந்தேதி காலை 9.31 மணிக்கு தொடங்கியது.
வாகனங்கள் கண்காணிப்பு
இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ செயற்கைகோள் கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதேபோல் இன்னும் 2 செயற்கைகோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது.
‘கவுண்ட்டவுன்’ நிறைவு
முன்னதாக ராக்கெட்டை செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது. தொடர்ந்து நைட்ரஜன் கலப்பு ஆக்சைடுகள், மோனோ மீத்தேல் போன்றவை ராக்கெட்டின் 4-வது நிலையில் நிரப்பும் பணி நிறைவடைந்து, ‘கவுண்ட்டவுன்’ நடவடிக்கைகள் இன்று காலை 9.31 மணியுடன் நிறைவு செய்யப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இறுதிகட்டப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். www.tnpgtakarurdt.blogspot.in