Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 10, 2016

கருர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெற ஏற்பாடு

6.1.2016 புதன்கிழமை  மாலை சரியாக 6.40 மணிக்கு கரூர் CEO திரு மு.ராமசாமி . மற்றும் DEO திரு கோ.இராஜேந்திரன் அவர்களை கரூர் மாவட்ட நிர்வாகிகள்  சந்தித்தோம்.

அவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

எழுத்துப்பூர்வமாக கீழ்காணும் கோரிக்கைகளை அளித்து தீர்வு காண கோரினோம்.

1) சங்கப் பொறுப்பாளர்களுக்கு சிறப்பு தற்செயல்  விடுப்பு  கோரி மனு கொடுக்கப்பட்டது

2) 2015 ஏப்ரல் பதினொன்றாம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு உழைப்பூதியம் இது வரை பெறப்படவில்லை என்பதை தெரிவித்தோம். ஒரு வாரத்திற்குள் இதற்கான பணம்  வழங்கப்படும் என CEO கூறினார்.

3) கடந்த பிப்ரவரி 2015 அரசு செய்முறைத்தேர்வுகள் உழைப்பூதிய நிலுவை குறித்த கேள்விக்கு இரண்டு நாட்களில் காசோலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

4) அனைத்து அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து வினவப்பட்டது.
அது நேரடியாக DEO மூலம் Special messenger மூலம் தொகுக்கப்பட்டு  விரைவில் அனுப்பி  பெறப்படும் என பதில் அளித்தார்.

5) எதிர்வரும் அரசு செய்முறை மற்றும் பொதுத்தேர்வுகள் தேர்வுப்பணி நியமனம் ஆசிரியர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் அமைய வேண்டும் எனவும், சில தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிலர் புறத்தேர்வாளர் செய்முறைத் தேர்விற்கு பணி நியமனம் பெற்று செல்வது குறிப்பிடப்பட்டது.

மேலும் ஆசிரியர்களின் இருப்பிட முகவரி அடிப்படையிலே தேர்வுப் பணி நியமனம் வலியுறுத்தப்பட்டது. நடைமுறைச் சாத்தியம் இல்லாததை CEO குறிப்பிட்டார்.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 70% ஆசிரியர்கள் கரூர் நகரில் வசிப்பதால் அது நடைமுறைப்படுத்துவது சிக்கலைத் தரும் எனவும் பள்ளி முகவரியை வைத்து பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அது 15 கிமீ ஆர வரையறைக்குள் வழங்க கோரிக்கை இடப்பட்டது. மேலும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், உடல் நலம் குன்றியவர்களுக்கு விலக்கு அளித்திட வலியுறுத்தப்பட்டது.

6) தனிநபர் கோரிக்கையாக நமது சங்க மூத்த ஆசிரியர்  குளித்தலை திரு ம.அந்தோணிசாமி அவர்களின் ஊக்க ஊதியம் கோரிய கருத்துரு நீண்ட காலம் தக்க நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப் படாமல் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

7) இன்று முன் அரையாண்டுத் தேர்வு முடிவுகளின் தரவு தயாரிப்பில் அனைத்து ஆசிரியரும் ஈடுபட்டதால் கற்பித்தல் பணியில் தேக்கநிலை எடுத்துரைக்கப்பட்டது.

பல தனியார் பாலிடெக்னிக், இஞ்சினியரிங், அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்காக புது வகையாக ஜெயித்துக் காட்டுவோம் போன்று நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கு  அரசுபள்ளி மாணவர்களை அழைப்பதை எதிர்காலத்தில் முற்றாக தவிர்த்திட வலியுறுத்தப்பட்டது.

அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

TNPGTA
கரூர் மாவட்டம்.

www.tnpgtakarurdt.blogspot.in