தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரிடம் அளிக்க அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒரு நாள் ஊதியத்தை மழை வெள்ள நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.