சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்து வதற்காக 32 மாவட்டங்களிலும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்ற சிறார் நீதிமன் றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதை அமல்படுத்துவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக இக்குழு கூட்டம் 2 வாரங்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக ‘மாற்றம் இந் தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்துவதற் காக அனைத்து
மாவட்டங்களிலும் தகுதியான மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். காலியாக வுள்ள மாவட்ட நன்னடத்தை அதிகாரி பணியிடத்தை நிரப்ப வேண்டும். சிறுவர் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் போதிய அளவில் ஏற்படுத்த வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள் மணிக் குமார், மாலா, ரவிச்சந்திரபாபு, ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற சிறார் நீதிமன்ற குழு, சிறுவர் இல்லங்கள் குறித்து ஆய்வு நடத்தி பல பரிந்துரைகளுடன் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், சிறார் நீதிச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக காலியாக வுள்ள நன்னடத்தை அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகளின் பணி யையும் சேர்த்து கவனித்து வரும் நன்னடத்தை அதிகாரி மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளை அப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் பணியிடத்தை உரு வாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி களை நியமிக்க வேண்டும். 8 சிறுவர் இல்லங்கள் உள்ளன. அவை போதுமானவை. ஆனால், அந்த இல்லங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உயர் நீதிமன்ற சிறார் நீதிமன்றக் குழு அளித்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்ற சிறார் நீதிமன்ற குழு அளித்துள்ள அறிக்கை திருப்தியாக உள்ளது. இந்த குழு மிகவும் சிரமப்பட்டு தகவல்கள் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக மனுதாரரே குறிப் பிட்டுள்ளார். இந்த பரிந்துரைகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
எவ்வளவு காலத்துக்குள்..
இப்பரிந்துரைகள் அமல்படுத்தப் படுவதை உயர் நீதிமன்ற சிறார் நீதிமன்ற குழு கண்காணிக்க வேண் டும். பரிந்துரைகளில் எந்தெந்த பணிகளை எவ்வளவு காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். அதில் ஏதா வது சிரமம் இருந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்.
பரிந்துரைகள் அமல்படுத்தப்படு கின்றனவா என்பதைப் பார்ப்பது தான் நீதிமன்றத்தின் பணியாகும். எனவே, பரிந்துரைகள் நிறைவேற் றப்படுவது குறித்து தெரிந்து கொள்ள வசதியாக இந்த வழக்கை அவ்வப்போது பட்டியலிட வேண் டும். குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவது குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கு வதற்காக இக்குழுவின் முதல் கூட்டம் 2 வாரங்களுக்குள் கூட்டப்பட வேண்டும். வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.