Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 18, 2015

மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த கூடுதல் அவகாசம் தேவை: நான்கு வாரத்திற்குள் நடத்த முடியாது என்றது சிபிஎஸ்இ

ரத்து செய்யப்பட்ட மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று மத்திய பள்ளி கல்வி வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வை நாடு முழவதும் சுமார் 6 லட்சம் பேருக்கு மேல் எழுதினர். ஆனால் பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் முன் கூட்டியே கேள்வி தாள் வெளியானது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவபடிப்பு நுழைவு தேர்வை ரத்து செய்ததுடன் நான்கு வாரத்திற்குள் மறு தேர்வு நடத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  இன்று தாக்கல் செய்த மனுவில் நான்கு வாரத்திற்குள் தேர்வை நடத்துவது சாத்தியமில்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வை நடத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.