Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 18, 2015

குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?- ஆன்லைனில் தெரிந்துகொள்ள வசதி

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.
துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அதிகாரி (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 26-ந் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவுசெய்து விண்ணப்ப நிலையை அறிந்துகொள்ளலாம்.