ஜெர்மன் குழந்தைகள் நல மருத்துவர், தனது 102வது வயதில் பிஎச்.டி., பட்டம் பெற்றார். ஜெர்மன் மருத்துவர் இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட் தொண்டையடைப்பான் பற்றிய ஆய்வுக்கட்டுரையை 77 ஆண்டுகளுக்குமுன் சமர்ப்பித்தார். இவரது தாய் யூதர் என்பதால் தேர்வில் பங்கேற்க விடாமல் நாஜிக்களின் சட்டம் தடுத்தது. இந்நிலையில் ஹாம்பர்க் பல்கலை பேராசிரியர்களிடம் தனது ஆய்வுக்கட்டுரை பற்றிய கேள்விகளுக்கு இவர் திருப்தியான பதிலளித்தால் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஹாம்பர்க் பல்கலையில் நடந்த விழாவில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.