Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, May 14, 2015

மாணவர் சேர்க்கைக்காக விடுமுறையில் விழிப்புணர்வு பேரணி


கரூர் மாவட்டத்தில் பள்ளித் தேர்வுகள் முடிந்து, விடுமுறையில் இருந்த மாணவ, மாணவியரை அழைத்து, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தியதால், பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
கரூர் மாவட்டம், பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி கார்வழியில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பள்ளி வயது வந்த குழந்தைகளை கண்டறிந்து, அரசு பள்ளிகளில் சேர்க்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டது. நேற்று முன்தினம், கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின்படி, விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கரூர் மாவட்டம் கார்வழி பஞ்சாயத்து யூனியன் பகுதியில், பள்ளியில் படிக்கும் வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி, பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன், பள்ளி தலைமையாசிரியர் வாசுதேவன் ஆகியோர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர். அதேபோல், பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலை துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளை சீருடையில் வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்து வந்து, மாணவர் விழிப்புணர்வு சேர்க்கை பேரணியில் பங்கேற்க வைத்தனர். இதில், பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, தென்னிலை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம் முழுவதும், பள்ளி தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க வைத்த சம்பவம், பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.