Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, May 14, 2015

ப்ளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் இன்று கடைசி நாளாகும்.


 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே, 7ம் தேதி வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், 5,192 மாணவர்கள், 5,726 மாணவியர் என மொத்தம், 10,918 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,708 மாணவர்கள், 5,305 மாணவியர் என மொத்தம், 10,013 பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டு, 91.71 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வகளாக தேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல் கோரியும், மதிப்பெண் மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கின்றனர்.
ப்ளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்ய கோரியும் மே, 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை விண்ணப்பிக்க, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன் லைனில், தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரியும், மதிப்பெண் மறுகூட்டல் கோரியும் படிவம் பள்ளியிலும் வழங்கப்படும். எந்தெந்த பாடங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவை, எந்தெந்த பாடங்களுக்கு மறுகூட்டல் மட்டும் தேவை, என்பன போன்ற விவரங்களை, மாணவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்குரிய தொகையை பணமாக கொடுக்க வேண்டும். விடைத்தாள் நகல் பகுதி- 1, மொழி பாட கட்டணம், 550 ரூபாய், பகுதி- 2 ஆங்கிலம் - 550 ரூபாய், ஏனைய பாடங்கள் ஒன்வொன்றுக்கும், 275 ரூபாய், மறு கூட்டல் பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாய், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மறு மதிப்பீட்டிற்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை என்றால், மாணவர்கள் விரும்பினால் மறு கூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம், என கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில்,""விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (இன்று) கடைசி தேதி. அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் கல்வித்துறைக்கு நேரிடையாக செல்கிறது. பட்டியல் அனுப்பிய பின், கரூர் மாவட்டத்தில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர், என்ற விவரம் தெரியும்,'' என்றார்.