Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, May 14, 2015

கரூர் மாவட்டத்தில் நல்ல மழை தப்பித்தது மானாவாரி பயிர்கள்


கரூர் மாவட்டம், முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கரூர் நகரில் நேற்று பலத்த மழை பெய்ததால், மானாவாரி பயிர்கள் தப்பித்தன.
கரூர் மாவட்டம், க.பரமத்தியில் நேற்று காலை, 2 மணி நேரமும், மாலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருவதால், கம்பு, சோளம், ராகி, கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் செழித்து வளரும், என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
அதேபோல், வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில், தொடர்ந்து லேசான மழை பெய்து வருவருதால், காய்ந்து கிடந்த நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நன்கு செழித்து வளர்வதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும், என்று அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை இல்லாவிட்டாலும், லேசான மழை பெய்து வருவதால், மானாவரி பயிரினான முருங்கை செழித்து வளரும் என்பதால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் லேசான மழையும், மாலை நல்ல மழை பெய்ததால், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் செழித்து வளரும் என்றும், லாலாபேட்டையில் கருகிக்கிடந்த வெற்றிலை கொடிக்கால் புத்துயிர் பெறும், என்று அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கரூர் நகரில், நேற்று காலை லேசான மழை பெய்தது. மீண்டும், மாலை, 4 மணி முதல் 6 மணி வரை நல்ல மழைபெய்தது. இதனால், கரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன் அக்னி வெயில் உக்கிரத்தில் இருந்து மக்கள் தப்பித்தனர்.