Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, May 05, 2015

தெய்வத்தான் ஆகா தெனினும்....

தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தும்
ஆய்வக உதவியாளர் 4360 பதவியிடங்களுக்குரியதேர்வு இம்மாத இறுதியில்
நடைபெறவுள்ளது. 

தமிழகம் முழுவதும் 4.5இலட்சம் பேரும், கரூர்
மாவட்டத்தில் மட்டும்ஏறக்குறைய 20000க்கும் மேற்ப்பட்டோர்
விண்ணப்பித்துள்ளதாக தகவல்.

நிறைய நண்பர்கள் தேர்விற்கு மும்முரமாக
தயாராகி வரும்இந்நிலையில் இந்ததேர்வு தேர்தல் நிதிக்காக என்று வழக்கம்
போல் ஒருபுரளியை யாரோ கொளுத்திப்போட, யாருடைய தயவுமின்றி தன் சொந்த
காலில் நின்றுகுடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றத்துடிக்கும் இளைஞர்கள்
மனதில் விரக்தி தீகொளுந்துவிட்டு எரிகிறது..

தமிழகத்தைப் பொறுத்தமட்டில்
ஏதேனும் தேர்வு அறிவிக்கப்படும் போதெல்லாம் இப்படி ஒரு புரளியை
கிளப்பிவிட்டு பண வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் உண்டு.எனவே நண்பர்களே
இதுபோன்ற ஏமாற்றுபேர்வழிகளை நம்பி ஏமாறாதீர்கள். போட்டித்தேர்வுகளில்
திறமைதான் எடுபடும் பணமல்ல.. !
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்
.எனவே
உங்களுடைய திறமையை நம்புங்கள், திட்டமிட்டு
படியுங்கள், வாழ்வில் உயருங்கள்.,..!!உழைப்பே உயர்வு தரும்..!!!
                                                                  -வாழ்த்துகளுடன் TNPGTA KARUR DT