Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, May 18, 2015

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு.!!!


பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது,
ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவநெறி முறைகள் தனியாக
உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும்
ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும் போது, அந்த அறையில்
பெண்செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும்
பெண் நோயாளியுடன் வரும் பெண்உதவியாளரும் அறையில் இருக்கலாம்.பெண் நோயாளி
தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி
சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம்,
ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த
பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல்,
சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண்கள் வருவார்கள். இதற்கு வயிற்று
பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்து தான் பிரச்சினையைக்
கண்டறிய முடியும்.இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண்
நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை
தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண்
நோயாளி ஆட்சேபம் தெரிவித்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை
எடுத்துவிட வேண்டும்புகார் கொடுக்கலாம்:சிகிச்சைக்கு வரும் பெண்
நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில்
ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற
முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண்
புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண்
நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மைஎன்று தெரியவந்தால், அந்த
டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச்
சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.