கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 22ம்தேதி துவங்குகிறது. கரூர் அரசு கலைக்கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது, கரூர் அரசுகலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இதற்கான விண்ணப்பம் வழங்கல் கடந்த 4ம்தேதி துவங்கியது. 18ம்தேதிவரை விண்ணப்பம் விநியோகம் நடைபெற்றது. அன்று மாலை வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவ மாணவிகள் அளித்தனர். கரூர் அரசுகலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் 3ஆயிரத்து 937 விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டைவிட இது அதிகம் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இளங்கலை பிஏ, தமிழ், பொருளியல், ஆங்கிலம், வரலாறு, பிபிஏ, பிகாம் வணிகவியல், சிஏ, பிஎஸ்சி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிபொறி அறிவியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், புள்ளியியல் ஆகிய பாடங்களை முதன்மையாக கொண்ட படிப்புகள் உள்ளன. பட்டமேற்படிப்பில் எம்எஸ்சி கணிதம், தாவரவியல், விலங்கியல், கணிபொறி அறிவியல், இயற்பியல், புவியியல், வேதியியல், எம்ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், எம்காம் வணிகவியல், மொத்தம் 28பாடப்பிரிவுகள் உள்ளன.
சிறப்புக்கலந்தாய்வு 22ம்தேதி தொடங்குகிறது. விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்வாரிசுகள், போன்றவர்கள் இந்த சிறப்புகலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். வரும் 25ம்தேதி பிஏ தமிழ் ஆங்கிலத்திற்கும், 27ம்தேதி பிஎஸ்சி அனைத்து பாடப்பிரிவுளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 28ம்தேதி பிகாம், பிகாம்சிஏ, பிபிஏ, பிபிஎம், பிஏ வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வவு நடக்கிறது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.