Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, May 27, 2015

விவசாயிகள் சேனல் மோடி துவக்கினார்

புதுடில்லியில் உள்ள, அறிவியல் கழகத்தில், தூர்தர்ஷனின், 24 மணி நேர விவசாயிகள் சேனலை (கிசான் சேனல்), பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.

துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்றால், முதலில் கிராமங்கள் முன்னேற வேண்டும். கிராமங்கள் முன்னேற வேண்டுமானால், விவசாயிகள் முன்னேற வேண்டும். இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் இருக்கிறதே, மீண்டும் புதிதாக ஒரு சேனல் துவங்குவது ஏன் என்று மக்கள் யோசிக்கின்றனர். விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொள்வதற்காக இந்த சேனல் துவக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். விவசாயத்தின் திசையை மாற்றி, மாநிலங்களை வளப்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள 50 சதவீத விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சகம் இருப்பதே தெரியாது.

சில ஆண்டுகளுக்கு முன், பொட்டாஷ் மற்றும் பிற பொருட்கள் இல்லாதபோதும், ஒரு ஹெக்டேர் நிலத்தில், பல டன் தானியங்களை விவசாயிகள் விளைவித்தனர். 'ஜெய் ஜவான்; ஜெய் கிசான்' என்று லால் பகதூர் சாஸ்திரி முழக்கமிட்டார். அவர் பிரதமரானதும், வெளிநாட்டில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது. காலத்திற்கேற்றார் போல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.அப்போது சிறந்து விளங்கிய விளை நிலங்கள், தற்போது, வளம் குன்றி விட்டன. இந்த முறையை அரசு மாற்ற வேண்டும். விவசாய துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.