கரூர் நகரின் மையப்பகுதியில் ஈசானிய பார்வையுடன் அருளாட்சி செய்துவரும்
ஸ்ரீ மாரியம்மன், கரூர் கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும், சாதிமத
பேதங்களுக்கு அப்பாற்பட்டு இப்பகுதியின் குலதெய்வமாகவும் விளங்குகிறார்.
பண்டைய காலத்தில் அமராவதி ஆற்றின் மறுகரையில் கோவில் இருந்ததால், ஆற்றில் நீரோட்டம் உள்ள காலங்களில் கோவில் தரிசனத்துக்கு மக்களுக்கு வாய்ப்பின்றி போனது. இதனால், பழமையான அக்கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் புதிய கோவில் நிர்மாணிக்கப்பட்டது. கரூரின் மைய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு கிழக்கே சகோதர தெய்வமான ஸ்ரீ மாவடி ராமசாமியும், தெற்கில் அமராவதி நதிக்கரையில் ஸ்ரீ வஞ்சியம்மனும், வடக்கே ரயில்வே ஸ்டேஷன் அருகில், ஸ்ரீ வலங்கையம்மனும் எழுந்தருளி நகர காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் முக்கிய விழாவாக வைகாசி பெருவிழா கொண்டாடப்படுகிறது. "கம்பம் நடுதல்' முதல் காப்புக்கட்டுதல் மற்றும் கம்பம் ஆற்றில் விடுதல் வரை "காப்பு தடை' என்று சடங்குகள் நடக்கிறது. இவ்விழா நாட்களில் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் எதையும் நகரத்தினர் நடத்துவதில்லை என்னும் மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது.
கம்பம் நடுதல் விழாவில் கொண்டுவரப்படும் "கம்பம்' என்பது முழுமையாக சுத்தப்படுத்தி மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட வேப்பமரத்தின் மூன்று கொம்புகளுடன் கூடிய கிளையாகும். மூன்று நதிகளை குறிக்கும் வகையில் அனுமானிக்கப்படும் இந்த கம்பத்துக்கு, அம்மனுக்கு அளிக்கப்படும் பூஜை அனைத்தும் செய்யப்படுகிறது. தினசரி மக்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று குடங்களில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் கொண்டுவந்து கோவிலில் ஸ்தாபிக்கப்பட்ட கம்பத்தின் மீது ஊற்றுவது மரபு. கம்பம் சாடுதலையடுத்து சிறப்பு பெறும் விழாவாக பூச்சொரிதல் விழா நடக்கிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகள் ஊர்வலமாக இரவு முழுவதும் கோவிலுக்கு கொண்டுவரப்படுகிறது. ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் என பல நாட்டியங்களுடன் தாரை தப்பட்டை முழங்க நகர் முழுவதும் நள்ளிரவிலும் விழாக்கோலமாக விளங்கும்.
விழா முடிவாக கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து தொழுவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமாரியும், கம்பமும் மாலைமாற்று வைபவத்துக்கு பிறகு, கம்பம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஸ்ரீமாவடியான் அரிவாளுடன் முன்செல்ல கம்பம் ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அமராவதியில் கம்பம் நீரொழுக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இறுதியாக "சம்ரோஷனை' எனப்படும் அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஈசானிய பார்வையுடன் எழுந்தருளியுள்ளதால், பக்தர்கள் மீது கடைக்கண் பார்வை அருள் கிடைப்பதுடன், வேண்டும் வரம் நிறைவேறுவதாவும் நம்பிக்கை உள்ளது.
"மண்ணெல்லாம் திருநீறு' என்று மாரியம்மன் இருப்பிடத்தை கூறுவதற்கிணங்க இக்கோவிலில் வழங்கப்படும் திருநீற்று மண் பிரசாதம் ஓர் அருமருந்தாக விளங்குகிறது. ஸ்ரீமாரியம்மன் மழைக்கான தெய்வம் என்பதுக்கு சாட்சியாக ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விழாவின் போது மழை பெய்வது இன்றளவும் உண்மையான நிகழ்வாக தொடர்கிறது. மாரியம்மன் கோவில் முக்கிய விசேஷ நாட்கள்: கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடக்கும் வைகாசி பெருவிழா மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்களும் நடக்கிறது.