Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 30, 2015

பாதுகாப்பற்ற ஆழ்துளைக்கிணறு உடனே மூட கலெக்டர் உத்தரவு


""பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகளை, வரும் ஜூன், 15ம் தேதிக்குள் மூடிவிட வேண்டும்,'' என்று, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தெரிவித்ததாவது:
ஊரகப்பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில், குழந்தைகள் விழுந்து இறப்பதை முற்றிலும் தவிர்த்திடும் பொருட்டு, தமிழக அரசின் அரசாணை ஊரக வளர்ச்சி, ஆழ்குழாய் கிணறுகள், ஏற்கனவே உள்ள, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கிணறுகள் தோண்டுவது மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள், அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து பகுதிகளில் பொது மற்றும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள பயன்பாடற்ற, செயல்படாத ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை கண்டறிய, பஞ்சாயத்து தலைவர், பஞ்., செயலர் மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட குழு கிராமம் வாரியாக பயன்பாடற்ற, செயல்படாத ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை, கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்யப்பட்டது. எனவே, பொதுமக்கள் பயன்பாடற்ற, செயல்படாத ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் கண்டறிவதற்கு, மேற்கண்ட குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மூடப்படாத, கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தும், ஜூன், 1ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் மூடிகள் போடப்பட்டு, பாதுகாப்பாக மூடிவிட வேண்டும். அரசு உத்தரவால், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கைவிடப்பட்ட அல்லது தூர்ந்து போன ஆழ்குழாய் கிணறுகளை, நில உரிமையாளர்களே, மூடி போட்டு பாதுகாப்பாக மூடிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.