Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 23, 2015

படித்தேன்,ரசித்'தேன்' - 8 (உங்களின் பங்களிப்பில் )


எல்லா செய்திகளும் படிப்போரை கவரும் என்று சொல்ல முடியாது.
ஆனால் சில
செய்திகள் மட்டும்தான் படிப்போரின் கவனத்தை ஈர்த்து, புருவங்களை சுருங்க
வைத்து, வியப்பில் ஆழ்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும்.அந்த
வகையில் இணையத்தில் என்னை வசீகரித்த ஒரு செய்தியை உங்களுக்காக இங்கு
பதிவிடுகிறேன்.

 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது பார்க்க எளிதாக இருந்தாலும் அது
கடினமான வேலை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட
பணியை ஒரு பார்வையற்ற சிறுவன் மிக எளிதாகச் செய்து வருகிறான்.ஆமாம்.!
நம்புங்கள்..!

 அவன் பெயர் ராமானுஜன். பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை
சேர்ந்த பழனியின் பெற்றோர் விவசாய கூலிகள். மகனை தொண்டாமுத்தூரில் உள்ள
அரசு பார்வையற்றோர் பள்ளியில் படிக்க வைத்தனர். அங்கு விடுதியில்
தங்கிருந்து படித்து வந்தான்.பார்வையில்லா விட்டாலும் தொலைக்காட்சி
செய்திகளை கேட்பது அவனுக்கு பிடித்த விஷயமாக இருந்திருக்கிறது. 30 நிமிட
செய்தியை கேட்டுவிட்டு அதை அச்சு பிசகாமல் திருப்பி பேசிக் காட்டுவான்.
இந்த திறமைதான் அவனை இப்போது செய்தி வாசிப்பாளனாக்கி உள்ளது.ராமானுஜனின்
திறமையை கேள்விப்பட்ட லோட்டஸ் சேனல் அவனை அணுகி தங்கள் சேனலில் செய்தி
வாசிப்பாளனாக்கியது. அவனுக்கென்று ப்ரெய்லி முறையில் ஸ்கிரிப்ட் போர்ட்
தயார் செய்து அதை தடவிப்பார்த்து படித்துக் கொண்டே கேமராவை பார்க்க
பயிற்சி அளித்தது. அதன் பிறகு அவனை செய்தி வாசிப்பாளராக்கிறது. 30 நிமிட
செய்தி நேரத்தில் 30 செய்திகளை அநாயசமாக வாசிக்க ஆரம்பித்தான். தற்போது
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 மணிக்கு செய்தி வாசித்து வருகிறான்.
நல்ல பயிற்சி கிடைத்தும். தினமும் செய்தி வாசிக்க வைக்க சேனல் முடிவு
செய்திருக்கிறது. லோட்டஸ் சேனல் ஏற்கெனவே பத்மினி பிரகாஷ் என்ற
திருநங்கையை செய்தி வாசிப்பாளராக்கியது குறிபிடத்தக்கது. ராமானுஜனின்
சாதனை கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  ஒட்டுமொத்த சமுதாயத்தை திரும்பிபார்க்க வைத்திருக்கும் தம்பி ராமானுஜன்
 2015ல் என்னைக் கவர்ந்த முதல் ஆச்சரியம்..!
உங்களுக்கு எப்படி..?

தகவலைப்பகிர்ந்தவர்

ப.கார்த்திகேயன்,   முகஆ, 
அரசுமேல்நிலைப்பள்ளி, 
ஈசநத்தம்,
கரூர் மாவட்டம்.



இப்பகுதிகளில் நீங்கள் படித்ததில் பிடித்த,மனம் லயித்த,சிந்தித்த, பயனுள்ள
தகவல்களை,கதைகளை பகிர்ந்து கொள்ளலாம். அவற்றை
99431 49788 என்கிற Whats app எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.

(குறிப்பு: படைப்பில் உங்களின் பெயர்,பள்ளி முகவரி தெளிவாக குறிப்பிடவும்)