Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, May 14, 2015

படித்தேன்,ரசித்'தேன்' - 2



 கல்வி குறித்து சுவாமி விவேகானந்தரின்சிந்தனைகள்


  • மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை

வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும்.


  • கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா?இல்லை. அல்லது அது

பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை.எத்தகைய பயிற்சியின் மூலம்
மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு
உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்."

  • வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை

ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான
இலட்சியமாகும்.
எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில்
நிற்கும் படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்.


  • குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு

பயிற்சிபெறுவதுதான் சிறந்த கல்வி முறை என்பது எனது கருத்து. ஆசிரியரின்
வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற
முடியாது".


  • உங்கள் பல்கலைக் கழக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஐம்பது

ஆண்டுகளாக அவை இருந்து என்ன சாதித்திருக்கின்றன ?சுயமாகச் சிந்திக்கும்
உண்மையான மனிதன் ஒருவனையும் அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. அவை வெறும்
தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பொது நலத்திற்காக நம்மைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்து நமது
நாட்டில் இன்னும் வளராமலேயே இருக்கிறது.


  • எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை. வளர்க்கச்

செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக்
கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.


  • தலைமுறை தலைமுறையாக நிலவிய, வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய

கல்விமுறை இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. இதுவா கல்விமுறை?
மனிதனை மெல்ல மெல்ல இயந்திரமாக்கிக் கொண்டு வருவதும் ஒரு கல்வியா? அந்த
இயந்திரமே எவ்வளவோ பாக்கியம் செய்தது. ஓர் இயந்திரத்தைப் போல நல்லவனாக
இருப்பதைவிடவும், ஒருவன் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையாலும் அறிவாலும்
உந்தப்பட்டுத் தவறு செய்வதே மேல் என்பது என்னுடைய கருத்து.


  • மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும் பிரம்மச்சரியமும்,

வாழ்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.
எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம்
சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடங்கூட இருக்கிறது. இந்த அறிவை
விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.


  • கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து

வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும்
ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.


  • வாழ்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை

வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம்
நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும்.நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை நீ
உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் - ஒரு
பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம்
கல்வி கற்றவன் ஆவாய்.


  • நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டு பிடித்தார் என்று சொல்கிறோம்.

அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து
காத்துக்கொண்டிருந்தா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம்
வரவே அதை அவர் கண்டு பிடித்தார்.

காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும்
மனதிலிருந்துதான் வந்திருக்கிறது பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும்
நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே
அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.
அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுக்கிறது.

                                                                                                     தகவலைப் பகிர்ந்தவர் 
                                                                                                   போ.வடிவுக்கரசி,        
                                                                                                   முகஆ,அமேநிப,
                                                                                                  கீழவெளியூர்,
                                                                                                  கரூர் மாவட்டம்



.படித்தேன்,ரசித்'தேன்':

நீங்கள் படித்ததில் பிடித்த,மனம் லயித்த,சிந்தித்த, பயனுள்ள
தகவல்களை,கதைகளை  இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம்.


இப்பகுதிகளில் உங்களின் படைப்புகள்/கேள்விகள் இடம் பெறச் செய்ய அவற்றை
99431 49788 என்கிற Whats app எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.

(குறிப்பு: படைப்பில் உங்களின் பெயர்,பள்ளி முகவரி தெளிவாக குறிப்பிடவும்)