Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 22, 2015

அரசு பள்ளிகளில் 19பேர் சாதனை


         10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் 3 பேரும், 498 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் இரண்டாமிடமும், 497 மதிப்பெண்கள் பெற்று 10 பேர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

வாழப்பாடி அரசு பள்ளி சாதனை

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அரசு பள்ளி மாணவி ஜெயநந்தனா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா என்ற மாணவி 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதற்கு கிராம மக்கள் பள்ளி தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.